கடந்த 11 மாதங்களில் இலங்கை கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 196 இந்திய மீனவர்கள் கைது – 29 படகுகளையும் பறிமுதல் என கடற்படை தெரிவிப்பு!

Monday, November 20th, 2023

இலங்கை கடல் பரப்பிற்குள் 11 மாதங்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 196 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் தற்போது வரையில் 196 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதுடன், 29 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மாதம் 14 மற்றும் 28 ஆம் திகதிகளில் யாழ்.நெடுந்தீவு பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளுக்கு பின்னர் 21 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், முருகன் என்ற மீனவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊர்காவல் துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து சட்ட விரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 22 மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: