கடந்த 10 மாதங்களில் 1,250 தொழுநோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Monday, November 27th, 2023

நாட்டில் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 1,250 தொழுநோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த தொழுநோயாளர்களில் 14 வயதுக்குட்பட்ட 131 சிறுவர்கள் அடங்குவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 256 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 138 பேரும், மட்டக்களப்பில் 128 பேரும் களுத்துறையில் 92 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள தொழுநோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: