கடந்த வருடம் அதிவேக நெடுஞ்சாலையூடாக 8 பில்லியன் ரூபாய் வருமானம்!

Saturday, January 15th, 2022

2021 ஆம் ஆண்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக நாட்டுக்கு 8.8 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அதிகூடிய வருமானம் பெறப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டைவிட 21 சதவீத அதிகரிப்பாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக 4.5 பில்லியன் ரூபா  வருமானமும், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட ஏனையவற்றின் ஊடாக 4.3 பில்லியன் ரூபாய் வருமானமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடயே, 2021 ஆம் ஆண்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 38.6 மில்லியன் வாகனங்கள் பயண நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: