கடந்த நள்ளிரவுமுதல் இரத்தானது நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம்!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) முதல் இரத்தாகியுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதும் நடைமுறைப்படுத்துவதும் நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு உட்பட்ட நிலையில், அது நிறைவேற்றப்பட்ட 14 நாட்களுக்குள் ஜனாதிபதியால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எனினும், 14 நாட்களுக்கு மேலாகியும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் நீக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
நேற்றும் இதுவரையில் 2,906 பேருக்கு கொரோனா!
பிரதி முதல்வரின் சிறு பிள்ளைத்தனமான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது - யாழ் மாநகர முதல்வர் மணிவண்ண...
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் – ஜனாதிபத...
|
|