கடந்த செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் நேற்று 900 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!

Thursday, January 27th, 2022

கடந்த செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் நேற்றையதினம் நாட்டில் 900 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் மேலும் 927 பேருக்கு நேற்று (26) கொவிட்-19 தொற்று உறுதியானது. இதன்படி, தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 6 இலட்சத்து 4 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளதென அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நேற்றுமுன்தினம் 16 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று விடுத்த அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: