கடந்த கால குற்றங்களுக்கு தண்டனை இல்லை – வெளிவிவகார அமைச்சர்!

Saturday, March 10th, 2018

கடந்த கால குற்றச் செயல்களுக்கு காணாமல் போதல் குறித்த சட்டத்தின் ஊடாக தண்டனை விதிக்கப்பட முடியாது என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

பலவந்த காணாமல் போதல்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர்பில் விளக்கமளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைவரையும் பலவந்த காணாமல் போதல்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக இலங்கையர்கள் வெளிநாட்டு நீதிமன்றங்களில் தண்டனை விதிக்கும் நடைமுறைகள் கிடையாது.

இந்த சட்டம் கடந்த கால குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதிக்கும் வகையிலானதல்ல.

இந்த சட்டத்தின் 8ம் சரத்தில் குற்றச் செயலில் ஈடுபட்டு நாட்டில் எங்கேனும் மறைந்திருந்தால் அவரை தண்டிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டதாக கருதப்பட முடியாது.

இந்த சட்டத்தின் ஊடாக சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக இடம்பெற்ற விடயங்களுக்கு தண்டனை விதிக்கப்பட முடியாது என திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

Related posts: