கடந்த எட்டு நாட்களில் 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவு – விஷேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் தெரிவிப்பு!

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் தீவிரமடைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 26,622 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை கடந்த எட்டு நாட்களில் 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளரான வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் பதிவாகிய நோயாளிகளின் பகுப்பாய்வின் போது 82 அதிக ஆபத்துள்ள வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் பரவலைக் குறைக்கும் நோக்கில் எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|