கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழப்பு!

Sunday, March 17th, 2024

கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த காலப்பகுதியில் 18 ஆயிரத்து 556 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த மாதத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 2,132 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு அதி அபாய வலயங்களாக 10 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: