கடந்த இரண்டு மாதங்களாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிக சந்தோஷமாக தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர் – யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் நற்குணம் தெரிவிப்பு! .

Sunday, June 9th, 2024

கடந்த இரண்டு மாதங்களாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிகவும் சந்தோஷமாக தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடியதாவிருந்ததாக. யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.

ஊடக் சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்ததுடன் மேலும் கூறுகையில் – கடந்த இரண்டு மாதங்களாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிகவும் சந்தோஷமாக தொழில் மேற்கொள்ள கூடியதாவிருந்தது.

எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவில் மீன்பிடி தடைக் காலம் முடிவடையுள்ள நிலையில் இந்திய கடற்றொழிலாளர்கள் இல்ங்கைக்கு அத்துமீறி வராமல் இருக்க இரு நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய பிரதமராக மோடி தெரிவானமைக்கு கடற்றொழிலாளர்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடிப் படகுகளை தடைசெய்ய வேண்டும்.

எதிர்வரும் 15 ஆம் திகதி மீன்பிடி தடைக் காலம் முடிந்து இந்திய இழுவை மடி படகுகள் எமது எல்லைக்குள் வராது தடுக்க இலங்கை அரசு கடற்படை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம், கடற்றொழில் அமைச்சு, கடற்படை இதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: