கடந்த ஆட்சியில் இருந்த இரு முக்கியஸ்தர்களே ஆவாவை உருவாக்கினர் – அமைச்சர் ராஜித!

புலம்பெயர் தமிழர்கள் தங்களது குடியுரிமையை பாதுகாத்து கொள்வதற்காக நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதோடு, தமிழ் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வைக்க முனைகிறார்கள் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்-
புலம்பெயர் தமிழர்கள் தங்களது குடியுரிமையை பாதுகாத்து கொள்வதற்காக நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதோடு, தமிழ் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வைக்க முனைகிறார்கள்.
மற்றும் புலம்பெயர்ந்து வாழும் இனவாதிகள் அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு சதிமுயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டார். இரகசிய முகாம்கள் தொடர்பாக இதுவரையில் எந்த விடயங்களும் அறியக்கிடைக்கவில்லை. நல்லாட்சியில் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பான எந்தவித பதிவுகளும் இல்லை. இந்த விடயம் தொடர்பில் எந்தவித பதிவுகளோ சாட்சிகளோ இல்லாமை குறிப்பிடத்தக்கது எனவும் குற்றம் சுமததினார்.
ஆவா குழுவானது முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் திட்டத்திற்கு அமைய அப்போதிருந்த இராணுவ தளபதியால் யுத்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். யுத்தகாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்குழுவானது தற்போது இனவாதத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த முயற்சியில் அந்த இருவருமே ஈடுபட்டு வருவதென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.
ஆவா குழுவிற்கு அடிப்படை மற்றும் ஆயுத வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பது இவர்கள் இருவருமே.மேலும், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. கோப் குழுவின் அறிக்கை இந்த விடயத்தை உறுதி செய்துள்ளது என தெரிவித்தார்.எனினும் இதனுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|