கடந்த ஆட்சிக்காலத்தில் முறையற்ற விதத்தில் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற அமைப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம் – பணிப்பாளர் நாயகம் ராஜ குணரட்ண தெரிவிப்பு!

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற அமைப்புகள் குறித்து இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரசசார்பற்ற அமைப்புகளிற்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ராஜ குணரட்ண தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நிதி எங்கிருந்து கிடைக்கின்றது, முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் என்னவென ஆராயமால் அரசசார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சில அரசசார்பற்ற அமைப்புகள் குறித்து சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்
ஏனைய சில அரசசார்பற்ற அமைப்புகளிற்கு எதிராகவும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பல அரசசார்பற்ற அமைப்புகள் பதிவு செய்யப்பட்டதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|