கடந்தகால ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசு செய்துகொடுக்கிறது – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

கடந்தகால ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை இந்த அரசாங்கம் மக்களுக்காக செய்து வருகின்றது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் மெகா திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தன்னாமுனை பிரதேசத்துக்கான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்தது தெரிவித்த அவர் –
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது வடக்கு கிழக்கை சார்ந்த பதினாறுக்கும் மேற்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிணைகளுக்கு தீர்வு மற்றும் இராணுவத்தினரின் வசமிருந்த மக்களின் வாழ்வாதார காணிகள், குடியிருப்பு காணிகள் தொடர்பில் தீர்வு பெற்றுத்தருமாறு கோரிக்கைகள் விடுத்து கைகளை தூக்கி அரசாங்கத்துக்கு ஆதரவளித்த போதும்; வடக்கு கிழக்கு மக்களுக்கு எதுவும் பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை ஆனால் இன்று ஜனாதிபதி கோடபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மக்களின் கோரிக்கைகளுக்கான வேலைத்திட்டம் இடம்பெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|