கடந்தகாலத்தை மறந்து விட்டார் முரளி: திலங்க சுமதிபால!

Saturday, April 21st, 2018

முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பழையன மறந்து விட்டதாக இலங்கை கிரிக்கட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

முதரளிதரன் பழையவற்றை மறந்து விட்டார். அவருக்கு தவறான நபர்களினால் தவறான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த தீய ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் முரளி செயற்பட்டு வருகின்றார்.

முரளிதரனை பல தடவைகள் காப்பற்றியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தினை ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் துணைத் தலைவர் மொஹான் டி சில்வாவும் அமோதித்துள்ளார்.

அண்மையில், இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட முத்தையா முரளிதரன், இலங்கை கிரிக்கட் துறை பின்னடைவை எதிர்நோக்கியமைக்கு அரசியல்வாதிகளே பொறுப்பு என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே திலங்க சுமத்திபால இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts: