கடத்தலில் தொடர்புடைய சிப்பாய்களுக்கு உச்சப்பட்ச தண்டணை – ராணுவத்தளபதி !

Friday, September 11th, 2020

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சிப்பாய்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இராணுவத்திலிருப்பவர்கள் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து பணியாற்றுபவர்கள் அல்ல. இலங்கை பிரஜைகளே இராணுவத்திலும் உள்ளனர். இராணுவ சீருடை அணிந்தாலும் அவர்களும் சமூகத்திலுள்ளவர்களே. இந்நிலையில் போதைப் பொருள் வியாபாரங்களில் ஈடுபடுகின்றவர்கள் அவர்களது செயற்பாடுகளில் இராணுவத்தினரையும் இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் ஆரம்பகாலம் முதல் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தற்போதும் நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை காணப்படுகிறதாகவும், இராணுவத்தில் போதைப்பொருளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது. அதற்கான வாய்ப்பை நாம் உருவாக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் இராணுவத்தளபதி கூறினார்.

எனினும் இராணுவத்திலுள்ள சிலர் விடுமுறையில் செல்லும் போதும் இராணுவ முகாம்களிலிருந்து வெளியில் சென்ற பின்னரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது எனக்குறிப்பிட்ட அவர், இராணுவ வீரர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை கண்டிக்கத்தக்கது என்பதால் அவர்களுக்கு வழங்கப்படக் கூடிய உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்’தக்கது.

Related posts: