கடதாசி தட்டுப்பாடு – ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் முறைப்படுத்த முடிவு – போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!
Monday, March 28th, 2022நாட்டில் நிலவும் கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் முறைமைக்கு மாற்றுவது தொடர்பில் முறைமையொன்று திட்டமிடப்பட்டுவருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரயில் பயண சீட்டுக்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசி பற்றாக்குறை காரணமாக கடதாசியைப் பயன்படுத்தும் முறைமையை இல்லாதொழித்து டிஜிட்டல் முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பல்வேறு காரணங்களினால் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படுவதாக மக்கள் மத்தியிலிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் ரயில் சேவைகள் தாமதத்தை நிவர்த்தி செய்வதற்கும் நிலவும் குறைபாடுகளை சரி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|