கடதாசி தட்டுப்பாடு – மின் கட்டண பட்டியலை வழங்குவதில் பாதிப்பு என மின்சார சபையின் பாவனையாளர் இணைப்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

கடதாசி தட்டுப்பாடு மற்றும் மின்சார சபை எதிர்நோக்கியுள்ள நிதிப்பிரச்சினை காரணமாக மின் கட்டண பட்டியலை வழங்குவதில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் மாதாந்த மின் கட்டணப்பட்டியல் வழங்கப்படவில்லை என மின்சார சபையின் பாவனையாளர் இணைப்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நாலக்க ஜீவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாவணையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் பாரிய நீர் கட்டண பட்டியலுக்கு பதிலாக சிறியளவான பட்டியலை வழங்குவது தொடர்பில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் குழுவொன்றின் ஊடாக மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
யாழ்ப்பாணத்தில் பொலித்தீனக்குத் தடை – பூமி தினமான நாளை முதல் நடைமுறைக்கு
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
20 ஆவது திருத்த விவகாரம்: அரசு மீதான மக்களின் நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் ரோஹித அப...
|
|