கஞ்சா பயிரிடுதல் மற்றும் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சரவையில் முன்மொழிவு எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, February 6th, 2024

இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தமைக்கு தாம் பொறுப்பல்ல என  அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிரிடுதல் மற்றும் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சரவையில் முன்மொழிவு எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  இவ்வாறு கூறியுள்ள அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவிக்கையில்,

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே அமைச்சரவை அமைச்சர் அல்ல எனவும் கஞ்சா பயிரிடுவது தொடர்பில் அவர் கூறியதற்கு தாம் பொறுப்பல்ல எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: