கஞ்சா செடியைப் பூங்கன்று என்று நினைத்தேன் – நாவற்குழியில் கைதானவர் வாக்குமூலம்!

Tuesday, February 12th, 2019

நாவற்குழியில் கட்டடம் அமைக்கும் இடத்தில் கஞ்சா செடி வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர் ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அது தானாகவே வளர்ந்த பூங்கன்று என்று நினைத்து அதை அழிக்கவில்லை என்று சந்தேகநபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தெல்தெனியவைச் சேர்ந்த அவர், கட்டடம் அமைக்கும் வேலையில் ஈடுபடுபவர்.

கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று அவரைக் கைது செய்திருந்தோம் என்று சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாச் செடி பொலிஸாரால் மீட்கப்பட்டது. சந்தேகநபரை பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தினர். அதன்போதே பிணையில் விடுவிக்கப்பட்டார்.


எச்சரிக்கை... வெள்ளத்தில் விளையாடிய இரு சிறுவர்கள் பலி:  வத்தளையில் சோகம்!
நிதி நகர ஒப்பந்தம் இன்று கைச்சாத்து!
பாடசாலை நேரத்திற்கு மேலதிகமான ஆசிரியர்களை வேலை வாங்கும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை என்கிறது இலங்...
பாதிக்கப்பட்ட வர்த்தகங்களை மீள கட்டியெழுப்ப விசேட நிவாரணம் - இலங்கை மத்திய வங்கி!
ஒரு கோடி பெறுமதியான தமிழக மீன் பிடி படகுகள் அரசுடமையா​க்கம்!