கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பொலிஸ் பாதுகாப்பா? – வெட்கக்கேடு என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டு!

Saturday, August 26th, 2023

பொலிஸாரைக் கண்டபடி விமர்சித்து அரசியல் செய்து வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., தற்போது பொலிஸாரைத் தனது கொழும்பு வீட்டுக்கு வரவழைத்துப் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார். இது அவருக்கு வெட்கக்கேடான விடயம்.” என புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வடக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும், தெற்கில் சிங்களவர்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களால் தனது அரசியலை முன்நகர்த்துகின்றார் கஜேந்திரகுமார்.

கொழும்பில் மக்களின் எதிர்ப்புக்குப் பயந்த அவர், முற்கூட்டியே பெருமளவு பொலிஸாரைத் தனது வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார். 

கஜேந்திரகுமாருக்குத் துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள பொலிஸாரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வரட்டும்.” – என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: