கஜா புயல்: இலங்கைக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பு!

Thursday, November 22nd, 2018

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த கஜா புயல் இலங்கையில் வடக்கு பகுதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் கஜா புயல் காரணமாக 1,200 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லாத காரணத்தினாலேயே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக அனைத்துக் கடற்றொழிலாளர்களும் 3 நாட்கள் கடற்றொழிலுக்குச் செல்வதை தவிர்த்திருந்தனர்.

இதனால் நாளொன்றுக்கு 400 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கஜா சூறாவளி காரணமாக இலங்கையின் வான்பரப்பில் வழமை விடவும் அதிகளவான விமானங்கள் பறந்துள்ளதாக துறைசார் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக இலங்கைகக்கு 30 இலட்சம் ரூபாய் மேலதிக வருமானம் ஈட்டமுடிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: