“கஜா” புயலை எதிர்கொள்ள யாழ்ப்பாணத்தில் முன்னாயத்த ஏற்பாடு!

கஜா என்னும் புயல் வடக்கை தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்டத்தில் இன்று (14) இடம்பெற்றது
வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட்கூரேயின் தலைமையில் இந்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
இவ்வாறான ஓர் புயல் ஒன்று தாக்கும் சந்தர்ப்பத்தில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது அத்துடன் அதன்போது சேதங்கள் ஏதும் ஏற்படாமல் என்ன முன் ஆயத்தங்கள் செய்ய வேண்டும் என்பவை தொடர்பில் துறைசார் அதிகரிகளிடம் வடமாகாண ஆளுனர் ஆலோசனைகளை கேட்டறிந்தார்
குறிப்பாக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதுடன் புயல் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பொதுமக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுனர் இதன்போது அதிகாரிகள் மற்றும் முப்படையினரை கேட்டுக்கொண்டார்
சேதாரங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடி நிவாரணங்கள் மற்றும் அத்தியவசிய பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் விதமாக தொண்டு நிறுவனங்களின் உதவிகளை கோருவது எனவும் இங்கு முடிவெடுக்கப்பட்டது குறித்த புயலின் தாக்கம் தொடர்பில் யாழ் திருநெல்வேலி வானிலை ஆய்வு மைய பணிப்பாளர் ரி.பிரதீபன இவ்வாறு விளக்கமளித்தார்-
Related posts:
|
|