கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் மலேரியா தடுப்பூசியை ஏற்றுங்கள் – வைத்திய கலாநிதி ஜெயக்குமரன்!

மலேரியா நோயைத் தடுக்கும் வகையில் கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முற்கூட்டியே மலேரியா நோய்த்தடுப்பு மருந்து ஊசியை ஏற்றுமாறு பிராந்திய மலேரியா நோய்த்தடுப்பு வைத்திய அதிகாரி ஜெயக்குமாரன் அறிவித்துள்ளார்.
அத்துடன் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் இதற்கான சகல ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கச்சத்தீவு அந்தோனியர் ஆலயத்தின் வருடாந்தம் அடுத்த மாதம் 11ஆம், 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது கடந்த டிசம்பர் மாதம் பல லட்சம் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட இவ்வாலயத்திற்கு இம்முறை பெருந்தொகையான பக்தர்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருபவர்கள் மூலம் மலேரியா நோய்ப்பரம்பல் ஏற்படக்கூடடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதனால் இந் நோய்ப்பரம்பலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் குடாநாட்டிலிருந்து ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முற்கூட்டிய தடுப்பூசி ஏற்றுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|