கச்சதீவை ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது!

Monday, July 11th, 2016

கச்­ச­தீவை இந்­தியா மீண்டும் பெறவேண்­டு­மானால் இலங்­கைக்கு எதி­ராக போர் தொடுக்க வேண்டும். அதை­வி­டுத்து வேறு வழி­யில்லை எனத் தெரி­வித்­துள்ள தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார.

தமிழ்­நாட்டு மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களை மூடி­ம­றைக்­கவே கச்­ச­தீவை மீட்போம் என்ற விட­யத்தை ஜெய­ல­லிதா முன்வைக்கின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்­பாக டாக்டர் வசந்த பண்­டார மேலும் கூறு­கையில்-

1976 ஆம் ஆண்டு இந்­திய பிர­த­ம­ரான இந்­தி­ரா­காந்­தியால் சட்­ட­ரீ­தி­யாக உடன்­ப­டிக்கை மூலம் அன்றைய இலங்­கையின் பிர­த­ம­ரான ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்­க­விடம் கச்­ச­தீவு கையளிக்கப்பட்டது.

அன்­றுடன் கச்­ச­தீவு தொடர்­பான இந்­தி­யாவின் உரிமம் இல்­லாமல் போய்­விட்­டது. கச்­ச­தீவு இன்று இலங்­கைக்கு சொந்­த­மா­னது. இரு நாடு­க­ளுக்­கி­டையே செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கைக்கு அமைய சட்­ட­ரீ­தி­யாக இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டது. இது சர்­வ­தேச உடன்­ப­டிக்கை. இதனை மீறி கச்­ச­தீவை மீண்டும் இந்­தி­யாவால் பெற முடி­யாது. அவ்­வாறு பெற வேண்­டு­மானால் இலங்­கைக்கு எதி­ராக போர் தொடுத்து பல­வந்­த­மா­கவே கச்­ச­தீவை இந்­தியா பெறவேண்டும். அதை­வி­டுத்து வேறு வழி­யில்லை. இவ்­வா­றான செயற்­பாட்டை இந்­திய மத்­திய அரசு முன்­னெ­டுக்­காது. எனவே ஜெயலலிதா கச்சதீவை மீட்போம் என கூச்சலிடுவது, தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினையை திசை திருப்பும் நோக்கானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: