கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை!

Monday, February 19th, 2018

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாலயத் திருவிழா தவக்காலத்தில் வரும் இரண்டாவது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படும் எனயாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இதற்குரிய ஆயத்தங்களை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்திரு எமில்போல் அடிகளார் மேற்கொண்டுள்ளார். இவ்வருடம் இத் திருவிழாவிற்கு உள்நாட்டிலும் இந்தியாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: