கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா இடம்பெற்றது!
Friday, December 23rd, 2016வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவில் இலங்கை அரசாங்கத்தால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை(23) நடைபெற்றது.
இன்று காலை-08.30 மணியளவில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்.மறை மாவட்ட ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் தேவாலயம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஐன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே,யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், இலங்கைக் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்ண மற்றும் யாழ், வெளிமாவட்டங்கள், தமிழகம் ஆகியவற்றைச் சேர்ந்த பொதுமக்கள், கடற்படையினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
ஏ-9 வீதியில் கடும் பனி மூட்டம்!
தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பை வழங்க தாம் தயங்கப் போவதில்லை – ஜனாதிபதி அறிவிப்பு - இலங்கைக்கு ...
வெளிநாட்டு கடன்களுக்குமான தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – மத்தியவங்...
|
|