கச்சதீவில் ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

கச்சதீவில் புதிய அந்தோனியார் ஆலயத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயமானது இலங்கை அரசாங்கத்தினதும், யாழ் மறை மாவட்டத்தினுடைய நிதி ஒதுக்கீட்டுடனும் கட்டப்பட்டு வருகின்றது. கடந்த மே மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டபோது தமிழ் நாட்டிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது.
புனித அந்தோனியார் கோவில் திருவிழாவில் தமிழக மீனவர்களும் கலந்துகொள்வதால் தமிழக மீனவர்களினதும் பங்களிப்பு இந்த ஆலயத்திற்கு முக்கியம் என தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த தேவாலயமானது மீண்டும் அடுத்த திருவிழாவிற்கு முன்பாக கட்டிமுடிக்கப்பட வேண்டுமென்ற யாழ் ஆயரின் பணிப்புக்கமைய விரைவாக கட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
15 நாட்களில் 430 டெங்கு நோயாளிகள் பதிவு !
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – சுகாதார தர...
உக்ரைனிலுள்ள இலங்கையர்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது - வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!
|
|