ஓரிடத்தில் குவிப்பது சாத்தியமற்றது – இராணுவப் பேச்சாளர்!

Thursday, September 7th, 2017

யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து இராணுவ வீரர்களையும் ஓரிடத்தில் குவிப்பதென்பது சாத்தியமற்றது என்று இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

45 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட யாழ். கோட்டைக்கு இராணுவத்தினர் சென்றால், அவர்கள் தங்கியுள்ள தமிழ் மக்களின் காணிகளை திருப்பிக் கொடுக்க முடியும் என அண்மையில் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கூறியிருந்தார்.

ஆளுநரின் இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.யாழ். கோட்டை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து இராணுவ வீரர்களையும் ஓரிடத்தில் குவித்து வைப்பது சாத்தியமற்றது.எனினும் அது ஆளுநரின் தனிப்பட்ட கருத்து என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் அபாயம் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் ...
தாமரை தடாகத்தை நிர்மாணித்தது முகப்புத்தகத்தில் புகைப்படமெடுத்து பதிவிட அல்ல - நாடாளுமன்ற உறுப்பினர் ...
டிசம்பர்முதல் வாசனை பொருள் ஏற்றுமதி - மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் தர சான்றிதழ...