ஓய்வூதிய வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு – 50 வயது பூர்த்தியடைந்த பெண்களும் 55 வயது பூர்த்தியடைந்த ஆண்களும் விரும்பிய வயதில் ஓய்வு பெற முடியும் எனவும் தெரிவிப்பு!

ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயதெல்லை தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, குறைந்தபட்ச ஓய்வூதிய வயதெல்லை 60 என திருத்தப்பட்டுள்ளது.
தற்போது அமுலில் உள்ள 55 வயது என்ற ஓய்வூதிய வயதெல்லை 60 வயது வரை நீடிக்கப்பட்டாலும், ஊழியர் ஒருவர் தனது சுய விருப்பின் அடிப்படையில் 55 வயதில் ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதேநேரம் புதிய சட்டமூலத்திற்கு அமைய, 55 வயதான ஊழியர்கள் 57 வயது வரை பணியாற்ற முடியும். 53 தொடக்கம் 54 வயதிற்கிடைப்பட்டவர்கள் 58 வயது வரையும் 52 வயதுடையவர்கள் 59 வயது வரையும் 52 வயதிற்கு குறைந்தவர்கள் மற்றும் புதிதாக இணைத்துக்கொள்ளப்படும் ஊழியர்கள் 60 வயது வரையும் பணியாற்ற முடியும்.
இதனிடையே 50 வயது பூர்த்தியடைந்த பெண்களும் 55 வயது பூர்த்தியடைந்த ஆண்களும் தாம் விரும்பிய வயதில் ஓய்வு பெற முடியும் எனவும் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|