ஓய்வூதியம் நிறுத்தப்படாது – அடமளிக்கப்படாது – ஓய்வூதிய பாதுகாப்புச் சேவை மத்திய நிலையம்

Friday, April 14th, 2017

ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான அரசின் முயற்சிக்கு எதிராக அரச அதிகாரிகள் குரல்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஓய்வூதிய பாதுகாப்புச் சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அண்மையில் கூறிய கருத்தின்படி ஓய்வூதியத்தை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தெரிய வந்துள்ளதாக ஓய்வூதிய பாதுகாப்புச் சேவை மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ஜானக துஷார கூறினார்.

தற்போது கூட அரச ஊழியர்கள் ஓய்வூதியங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்களை தௌிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன் மூலம் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்யும் அரசின் திட்டத்தை தோற்கடிக்க முடியும் என்று ஓய்வூதிய பாதுகாப்புச் சேவை மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ஜானக துஷார கூறினார்.

Related posts: