ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க முறையான ஏற்பாட்டைச் செய்ய உத்தரவு!

Thursday, May 25th, 2023

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்குவதற்கான முறையான திட்டத்தைத் தயாரிக்க ஓய்வூதியத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஓய்வூதியம் பெறுவதற்கு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்வதால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்யாததால் ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக ஓய்வூதியத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓய்வூதியத் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் விரக்தி நிலவும் அதேவேளை ஓய்வூதியம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு சரியான வழிமுறைகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு இலகுவாக சேவைகளை வழங்குமாறு ஜகத் குமார சுமித்ராரச்சி பணிப்புரை விடுத்திருந்தார்.

000

Related posts: