ஓய்வூதியத்தில் மாற்றம் செய்வதை அரசாங்கம் கைவிட வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

அரச ஊழியர்களுக்கு அவர்களது நிதிப் பங்களிப்புடன் ஓய்வூதியம் வழங்கும் செயல்திட்ட நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டுமெனவும் இல்லையேல் பாரிய நடவடிக்கைக்கு செல்வதை தவிர்க்க முடியாதெனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்:
2017 வரவு-செலவு திட்டத்தின் போது அரச ஊழியர்களுக்கு அவர்களது நிதிப் பங்களிப்புடன் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த யோசனையை நாம் எதிர்க்கின்றோம். நாட்டில் 14லட்சம் அரச ஊழியர்கய் உள்ளனர். இந்நிலையில் ஓய்வூதிய நிதியத்தை உருவாக்க வேண்டிய தேவையிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. இவ்வளவு காலமும் ஓய்வூதிய நிதியத்தை உருவாக்காதது எமது பிரச்சினை அல்ல. விதவைகள், அநாதைகள் ஓய்வூதியத்துக்கு 7வீதம் அரச ஊழியர்களின் சம்பளத்தில் இருந்த கழிக்கப்படுகிறது. இதுவரை ஏன் ஓய்வூதிய நிதியம் உருவாக்கப்படவில்லை என்பதே கேள்வி. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சொகுசு வாகனம் கேட்கின்றனர். அவர்களது சொகுசு வாழ்க்கைக்கு பணம் செலவழிக்கப்படுகின்றது. இந்நிலையில் அரச ஊழியர்களின் நிதிப் பங்களிப்புடன் ஓய்வூதியம் வழங்க முற்படுவதை நிறுத்த வேண்டும். இல்லையேல் அரச ஊழியர்கள் பாரிய செயற்பாட்டுக்கு செல்ல நேரிடும். இது தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் பேசவுள்ளோம். வரவிருக்கும் அரச ஊழியர்களுக்கு பாதகம் ஏற்படுத்த இடமளிக்கப்போவதில்லை என்றார்.
Related posts:
|
|