ஓய்வு பெற்ற கிராம சேவர்களுக்கு அழைப்பு!

Tuesday, March 21st, 2017

கிராம சேவகர் வெற்றிடங்களுக்குப் புதியவர்கள் நியமிக்கப்படும் வரை, ஓய்வுபெற்ற கிராம சேவகர்கள் 2,000 பேரை சேவையில் மீள இணைத்துக் கொள்ளவுள்ளதாக, உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கிராம சேவகர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படும் வரையே, ஓய்வுபெற்றவர்கள் மீள கடமைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.    வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே வஜிர அபேவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

Related posts: