ஓய்வு பெறும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு கோரிக்கை!

Saturday, October 29th, 2016

 

இலங்கையில் ஓய்வு பெற்றுக்கொள்ளும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு ஜாதிக சேவக சங்கமய என்னும் தொழிற்சங்கம் கோரியுள்ளது.

நிதி அமைச்சிடம் தொழிற்சங்கம் உத்தியோகபூர்வமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருவோரின் ஓய்வு பெறும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ள நிவாரணங்கள் தொடர்பில் தொழிற்சங்கம், பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஓய்வு பெறும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு கோரப்பட்டுள்ளது.

pension-planning-lic-india

Related posts: