ஓய்வுபெறுவதற்கு 1853 ஊழியர்கள் விண்ணப்பம் – இலங்கை போக்குவரத்து சபை!

Saturday, July 9th, 2016

சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெறுவதற்கான வழிமுறையின் கீழ், 1853 ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

8073 ஊழியர்களை சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெறச் செய்வதே இந்த வழிமுறையின் முக்கிய நோக்கமாகும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம மனிதவள முகாமையாளர் பிரேமலால் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து சபையில் தற்போது சுமார் 34,000 ஊழியர்கள் இருப்பதாகவும், சபையை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 24,800 வரையில் குறைப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழேயே சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெறும் வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம மனிதவள முகாமையாளர் கூறினார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் போதுமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் கிடைக்காத காரணத்தினால், சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெறுவதற்காக விண்ணப்பிக்கும் காலத்தை ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை மேலும் ஒருமாதத்தால் நீடித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: