ஓய்வுபெறுவதற்கு இணையத்தளம் மூலம் இன்று முதல் பதிவு மேற்கொள்ளலாம்!

Saturday, October 8th, 2016

ஓய்வுபெறுவதற்காக ஒன்லைன் முறையில் பதிவு செய்துகொள்ளும் வழிமுறை இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இந்த வழிமுறை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்..

‘மகிழ்வுடன் இளைப்பாறுங்கள்’ என்பதே இம்முறை ஓய்வூதிய தினத்தின் தொனிப்பொருளாகும்.தேசிய ஓய்வூதிய தினம் 2005 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு இலங்கையில் கொண்டாடப்படுகின்றது.இந்த தினத்தின் பிரதான வைபவம் களனி, வெதமுல்ல ஓய்வு விடுதியில் இன்று நடைபெறவுள்ளது.

25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 1000 இற்கும் அதிகமான ஓய்வுபெற்றவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.நாட்டில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான ஓய்வுபெற்றவர்கள் இருப்பதாக ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் சுட்டிக்காட்டினார்.

www . pens / gov . lk என்ற இணையத்தளம் ஊடாக இன்றுமுதல் ஒன்லைன் முறையில் ஓய்வுக்காக பதிவுசெய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஓய்வு பெற்றவர்களுக்காக வழங்கப்படும் புகையிரத பயண அனுமதிச்சீட்டும் இன்று முதல் ஒன்லைன் முறையில் விநியோகிக்கப்படும் என ஓய்வூதியத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.

Internet1

Related posts: