ஓய்வுநிலை ஆசிரியர் சின்னத்தம்பியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை!

28460145_1686177478087999_1160240253_o Sunday, February 25th, 2018

சமூகத்திற்கு நல் வழிகாட்டியாகவும் முற்போக்கு சமூக சிந்தனையாளருமான  ஓய்வுநிலை ஆசிரியர் சின்னத்தம்பி அவர்களின் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது இக்கிராமத்திற்கும் பேரிழப்பாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சண்டிலிப்பாய் மத்தியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம்(25) சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்திய பின்னர் அஞ்சலியுரையாற்றுகையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக காலஞ்சென்ற ஓய்வு நிலை ஆசிரியர் இராமன் சின்னத்தம்பியின் பூதவுடலுக்கு  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார். இதன்போது கட்சியின் வலி தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சன் (ஜீவா) உடனிருந்தார்.