ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் – 21 இலங்கை பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தகவல்!.
Thursday, April 18th, 2024ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து 21 இலங்கை பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குக் தீவுகளின் கொடியுடன் பயணித்த குறித்த கப்பல், அங்கு நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, ஓமான் வளைகுடாவில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் ஜாஸ்க் கடற்கரையிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனையடுத்து ஈரானிய அதிகாரிகளால், கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதுடன், அவர்களில் 21 இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில், 5 பேருக்கு உடனடி மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது எவ்வாறாயினும், எவருக்கும் பாரிய பாதிப்பு ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
000
Related posts:
வடக்கில் மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்!
பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளதால் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது - அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீ...
நாளைமுதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள...
|
|