ஓமானுக்கு இலங்கையிலிருந்து நேரடி விமான சேவை!

Monday, April 10th, 2017

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஓமானுக்கு நேரடி விமான சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த நேரடி விமான சேவை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, மஸ்கட் விமான நிலையம் வரையில் வாரத்தில் ஐந்து தடவைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நேரடி விமான சேவை மூலம் ஓமானிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: