ஓமானின் அதி வேக ‘அல் நாசிர்’ கப்பல் இலங்கையில்!

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு ஓமான் ரோயல் கடற்படைக்கு சொந்தமான “அல் நாசிர்” கப்பல் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதி வேகம் கொண்ட ஓமான் ரோயல் அல் – நாசிர் கடற்படை கப்பலை அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒஸ்டா என்பவரே நிர்மாணித்துள்ளார்.
இவ்வாறு அதி வேகம் கொண்ட கப்பல் வகையில் இது இரண்டாவது வகையாகும். கடற்படையினரின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், சட்டவிரோத கடத்தல்கள் மேற்கொள்பவர்களை பிடிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த கப்பல் பயன்படுத்தப்படுகின்றது. குறித்த கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்தவுடன் இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டுள்ளது.
Related posts:
அரிசி களஞ்சியசாலைகளை பரிசோதனையிடும் நடவடிக்கை ஆரம்பம்!
கோத்தபாயவின் வெற்றி உறுதியானது!
தனிமைப்படுத்தலுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நட்சத்திர விருந்தகங்கள் தொடர்பில் அவதானம் - சுகாதார அமை...
|
|