ஓமந்தையில் பேருந்து விபத்து: பலர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா – ஓமந்தை பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில் மரத்தடிகளை ஏற்றி வந்த கெப் ரக வாகனமொன்று ஓமந்தை இராணுவச்சாவடிக்கு அருகே வீதியில் தரித்து நின்ற சமயத்தில் அதி வேகமாக வந்த தனியார் பேருந்து கெப் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் தனியார் பேருந்தில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
தனியார் நிறுவனங்களுக்கு திரைப்பட விநியோக உரிமை மறுப்பு!
யாழ் மாநகரின் கரையோரத்தில் இடிதாங்கி அமைப்பதில் பின்நிற்பது ஏன்? - ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பின...
எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் தூதுவர்களை சந்திக்க தயார் – அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப...
|
|