ஓமந்தையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு!

Friday, August 26th, 2016

ஓமந்தை பாலமோட்டை பகுதியில் யுத்த காலத்தின் போது புலிகளால் புதைத்து வைத்ததாக கருதப்படும் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை தோண்டியபோதே எல்.எம்.ஜி மற்றும் எம்.ஜி ரக 30 துப்பாக்கிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.  அத்துடன், குறித்த பொருட்களை ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..

இதேவேளை, பொலிஸார் குறித்த ஆயுதங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: