ஓகஸ்ட் 5 இல் அனைத்துக்கும் தீர்வுகிட்டும் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் தவநாதன் நம்பிக்கை!

Sunday, July 19th, 2020

மக்களுக்காக ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  மொத்தமாக இருந்த 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 ஆவது சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய அமைச்சரவையில் 5 ஆவது சிரேஷ்ட அமைச்சராக விளங்குகின்றார்.

இந்நிலையில் எதிர்வரும் 5  ஆம் திகதி நடைறெவுள்ள தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டில் 5 ஆவது இடத்தில் இருக்கிறது வீணைச் சின்னம். அதேபோன்று எமது தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விருப்பு இலக்கமும் 5 ஆக இருக்கின்றது.

அந்தவகையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. க்கு  கிடைக்கப் போகின்ற ஆசனங்களின் எண்ணிக்கையும் 5 ஆக இருக்கப் போவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஈ.பி.டி.பி. இன் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் வை. தவநாதன் தெரிவித்துள்ளார்.

பளை நகர் பகுதியில் அமைச்சர் டகஸ் தேவானந்தா கலந்துகொண்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: