ஓகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி வரை வாக்காளராக பதிவு செய்யக் கால நீடிப்பு!

Wednesday, July 25th, 2018

வாக்காளர் இடாப்புக்கான கணக்கெடுப்புப் பதிவுப் படிவங்கள் கிராம அலுவலரால் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பதிவை மேற்கொள்ளாதவர்கள் உள்ளுராட்சி சபைகள் மூலம் பதிவு செய்வதற்கு நேற்று தொடக்கம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளராகக் கணக்கெடுக்கும் பிசி படிவம் கிடைக்காதவர்கள் பதிவை மேற்கொள்ள வந்தால் அதற்கு A எனும் படிவத்தை வழங்குமாறும் இந்தக் காலப்பகுதிக்குப் பின்னர் பதிவு செய்ய வருபவர்களுக்கு யாழ் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் த.அகிலன் அனைத்து உள்ளுராட்சி சபைகளின் செயலாளர்களுக்கும் அறிவித்ததுடன் மாதிரிப் படிவத்தையும் அனுப்பிவைத்துள்ளார்.

கடந்த ஜீன் மாதம் வாக்காளர்களாகக் கணக்கெடுப்பதற்கான படிவங்கள் அந்தந்தப் பிரிவு கிராம அலுவலர்களால் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டன. அவை மாத இறுதியில் மீளப் பெற்றுப் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Related posts: