ஒவ்வொரு 100 பேருக்கு 135 தொலைபேசிகள் மத்திய வங்கியின் ஆண்டறிக்கை கூறுகிறது!

Thursday, May 11th, 2017

இலங்கையில் சாதாரணமாக 100 நபர்களை எடுத்துக் கொண்டால் அவர்களிடம் 135.7 வீத தொலைபேசிகள் உள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த 100 பேரில்இ 12 பேரிடம் மாத்திரமே நிலையான தொலைபேசிகள் உள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கையடக்க தொலைபேசிகளின் வீதத்தினை ஒப்பிடும் போது அது 135.7 வீதமாக உள்ளதென 2016 ஆம் ஆண்டிற்காக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் 100 பேரை எடுத்துக் கொள்ளும் போது அவர்களிடம் 23.2 வீத இணைய வசதி காணப்படுவதாக மத்திய வங்கி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: