ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொரோனா நோயாளர் காணப்படலாம் – அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Friday, August 20th, 2021

எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணும் அளவுக்கு நாடு முழுவதும் கொரோனா பரவும் என அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அத்துடன் புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைக்கு மாறானது என அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர். கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் இவ்வைரஸானது பரவியுள்ளதாகவும், கொரோனா நோயாளிகள் தற்போது சுதந்திரமாக சமூகத்தில் நடமாடுவதாகவும் அவர் தெரிவித்த அவர் தனிநபர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்..

Related posts: