ஒவ்வொரு மக்களினதும் வீட்டுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் -ஜனாதிபதி!

Monday, October 3rd, 2016

நாட்டு மக்களின் வீட்டுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

எதிர்வரும் தசாப்தத்தில் அனைத்து இலங்கையர்களினதும் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யும் அபிலாஷையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. பண்டைய மனிதர்கள் குடும்பத்தின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள ஆறுகள் குளங்களுக்கு அருகாமையில் இருப்பிடங்களை அமைத்துக் கொண்டனர்.

அதன் பின்னர் மனிதனின் ஒட்டுமொத்த அபிவிருத்தி கேந்திர மையமாக வீடு அமைந்தது. அதேபோல் பொருளாதார சமூக மற்றும் ஆன்மீகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பிரதான காரணிகளில் ஒன்றாக வீடு அமைந்துள்ளது.இம்முறை உலக குடியிருப்பு தினம் “வீடமைப்பிற்கு முன்னுரிமை” என்ற தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

வீட்டுக்கும் மானுட அபிவிருத்திக்கும் இடையிலான உறவுகளை கருத்திற் கொண்டே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஆழமாக புரிந்து கொண்டுள்ள அரசாங்கம் அனைத்து இலங்கையர்களுக்கும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது என ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

world_habitat_day

Related posts: