ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகள் சேவையில்- நாளைமுதல் நடைமுறை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Sunday, December 6th, 2020

ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறித்த சேவை நடைமுறை நாளை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசேடமாக பாடசாலை நேரங்களில் மற்றும் அலுவலக நேரங்களில் குறித்த முறையில் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகளை இருக்கையில் மாத்திரம் அழைத்துச் செல்வதற்கு கடந்த தினம் பேருந்து பயணக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், சில வீதிகளில் அதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

நாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். அவ்வாறு செயற்படும் பேருந்துகள் பொறுப்பேற்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் அதேபோல் ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: