ஒவ்வொரு செயற்றிட்டங்களும் மக்கள் தேவைகளை அறிந்தே முன்னெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலை தெற்கு வட்டார குழு கூட்டத்தில் புதிய நிர்வாகத்தினரை தெரிவுசெய்து கட்டமைப்பை உருவாக்கியபின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
வலி. தெற்கு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக எமது கட்சியால் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்றிட்டங்களும் மக்கள் தேவைகளை அறிந்தே முன்னெடுக்கப்பட வேண்டும்.
கடந்தகாலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்தபோது எமது பிரதேசத்திற்கு பல்வேறுபட்ட நலத்திட்டங்களையும் கட்டுமானங்களையும் தொழில்வாய்ப்புக்களையும் வாழ்வாதார மற்றும் சுகாதாரம் கல்வி உள்ளிட்ட பலவாறான செயற்றிட்டங்களை பெற்றுக்கொடுத்து இப்பகுதி மக்களின் வாழ்வியலில் ஒரு புத்துணர்ச்சியை உருவாக்கியிருந்தார் என்பதுடன் இன்றும் அந்த முன்னெடுப்புகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
அந்தவகையில் அவரது எண்ணக்கருவான மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்பதற்கிணங்க நாம் ஒவ்வொருவரும் மக்களது தேவைகளை இனங்கண்டு அவர்களது வாழ்வில் தேவைகளை வெற்றிகொள்ளச் செய்து ஒளிமயமான வாழ்வியலை உருவாக்கி எமது பிரதேசத்தை ஏனைய பிரதேசங்களுக்கு முன்னுதாரணமான பிரதேசமாக மாற்றி அமைக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது வலிகாமம் தெற்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டடவுள்ள பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சிவரத்தினம், கட்சியின் வலி தெற்கு நிர்வாக செயலாளர் வலன்ரயன், கட்சியின் வலிகாமம் தெற்கு உதவி நிர்வாக செயலாளர் அரிகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Related posts:
|
|