ஒவ்வொருவரது கருத்தக்களுக்கும் ஆராயப்பட்டு அவை குறித்து இணக்கமான தீர்வை எட்டி கூட்டணி அரசாக முன்னோக்கி பயணிப்போம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Friday, June 25th, 2021

கூட்டணி அரசு என்றால் குழப்பம் இருக்கவே செய்யும் என சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கூட்டணிக் கட்சி என்பதால் “ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறான கருத்துகள், நிலைப்பாடுகள் இருக்கக்கூடும்.

இவை இணைந்து கூட்டணி அமைக்கும்போதும் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படலாம். எனவே, பிரச்சினைகள் இருப்பின் அவை குறித்து பேசி, தீர்த்து கூட்டணி அரசாக முன்னோக்கி பயணிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் உலக பொருளாதாரத்துக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. எமது நாட்டினது மட்டுமல்லாது அனைத்து நாடுகளினதும் தேசிய பொருளாதாரத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சட்ட திட்டம், கொள்கைத் திட்டம் மற்றும் வேலைத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அந்தவகையில் ஒவ்வொருவரது கருத்தக்களுக்கும் ஆராயப்பட்டு அவை குறித்து பேசி, இணக்கமான தீர்வை எட்டி கூட்டணி அரசாக முன்னோக்கி பயணிப்போம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: