ஒழுக்கம் இன்றி வந்தால் மறியல் செல்ல நேரிடும் – யாழ்ப்பாண நீதிமன்று எச்சரிக்கை!
Saturday, February 9th, 2019நீதிமன்றுக்கு வருவோர் நேர்த்தியாக ஆடை அணியாமல் தலைமுடி வெட்டாமல் என்றவாறெல்லாம் ஒழுக்கம் பேணாது வருவார்களேயானால் விளக்கமறியலில் வைக்கப்படுவர் என்று யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் கண்டிப்பான அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர், முடமாவடியில் வீடுகளை அடித்து உடைத்தமை, வாள்வெட்டில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு யாழ்ப்பாண நீதிவான் மன்றில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மன்றில் முற்பட்ட சந்தேக நபர்கள் நேர்த்தியாக ஆடைகள் அணியாது தலைமுடி வெட்டாது காணப்பட்டனர். அவர்களை அவதானித்த நீதிவான் நீதிமன்றுக்கு சமூகம் அளிக்கும்போது ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இனிமேல் வழக்குக்காக நீதிமன்றுக்கு வரும்போது நேர்த்தியாக ஆடைகள் அணிந்து வரவேண்டும். நாகரிகமான முறையில் தலைமுடி வெட்டியிருத்தல் வேண்டும். ஒழுக்கமற்ற முறையில் வந்தால் சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவீர்கள் என்று எச்சரித்தார்.
Related posts:
|
|